Advertisment

நாடளுமன்ற தேர்தல் 2024: இதை செய்யாவிட்டால் பதவி காலி... மா.செ.களுக்கு ஸ்டாலின் வார்னிங்!

நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் யாராவது தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
djkaa

மு.க.ஸ்டாலின் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் யாராவது தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவர் என்று தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) காலை காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க-வின் 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் 40 தொகுதிகளில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் தலைவரும்தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:  “பொது முக்கியத்துவம் வாய்ந்த சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாகக் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.

அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் - வலுவான மாநிலக் கட்சிகளும் - இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது ற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சிபாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன.

அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட 39 தொகுதிகளை வென்றோம் என்றால், நடக்க இருக்கும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும் - இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும்தான் முக்கியம்.

மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.”  என்று கூறினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில், நமது வேட்பாளர்கள் யாராவது தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment