இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம் மும்பையில் இன்று (17.03.2024) மாலை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் மும்பையில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார்.
மும்பையில் நடைபெறும் இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், “காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிவசேனா (உத்தவ் தாக்கரே பாலாசாகேப்) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதே போல, இன்று மாலை, மும்பையில் சிவாஜி பார்க்கில் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபின், மும்பையில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்று இரவே சென்னை திரும்புகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“