முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று (ஆகஸ்ட் 27) அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றார். முன்னதாக, “அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்” என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு சுறுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவரை தி.மு.க மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விமான நிலையத்திர்கு வந்து வழியனுப்பி வைத்தனர்.
முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக தி.மு.க தொண்டர்கள் மட்டும் மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்.
கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பதேயாகும். விமர்சனம் விவாதம் செய்வோருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“