Advertisment

'இல்லம் தோறும் ஸ்டாலின்': புதிய பிரச்சார இயக்கம் அறிவித்த தி.மு.க

தி.மு.க. 3 முக்கிய தீர்மானங்களை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளது. அதன்படி, பிப்.26ஆம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TN CM MK Stalin attacks on BJP and full statement in tamil

இல்லம் தோறும் ஸ்டாலின் பரப்புரை பிப்.26ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mk Stalin | Dmk | Lok Sabha | திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவை, “நாற்பதும் நமதே- நாடும் நமதே” என்ற கோஷத்துடன் பரப்புரை கூட்டங்கள் நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு நன்றி.

பிப்.26ஆம் தேதி முதல் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக பரப்புரை தொடங்க முடிவு.

மூன்றாவதாக, மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மார்ச் 2,3ஆம் தேதிகளில் அரசின் சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடத்த வேண்டும்” ஆகியவை ஆகும்.

Advertisment

வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சீட் பகிர்ந்து அளிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்தத் தேர்தலை தனித்து சந்திக்கும் நிலைக்க தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் சில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம்போல் வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரைகளை தொடங்கிவிட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin Dmk Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment