'என்னால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும்': கருணாநிதியை நேரில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

DMK Chief Karunanidhi Health Today: ராகுல் காந்தி சந்திப்பு புகைப்படம் மூலமாக கருணாநிதி உடல்நிலை பெரிய பின்னடைவில் இருந்து மீண்டிருப்பது புலனாகிறது.

M Karunanidhi Health LIVE UPDATES: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு 4ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முதல்நாள் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது.அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது. மருத்துமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

கருணாநிதி உடல்நிலை : ‘இயந்திரம் உதவி இல்லாமல் சுவாசிக்கிறார்’ உடன்பிறப்புகளுக்கு உற்சாக செய்தி

தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொடர்ந்து சீராக உள்ளது. நேற்று இருந்தது போல இன்று அவரது உடல்நிலை உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன் திமுக தொண்டர்கள் மீண்டும் கூடி வருகிறார்கள்.

M Karunanidhi, Karunanidhi Health Today News, Karunanidhi Health, மு கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை, DMK Chief Karunanidhi

M Karunanidhi Health News Today:கருணாநிதி வேடமிட்டு காவேரி மருத்துவமனைக்கு வந்த தொண்டர்

M Karunanidhi Health News Today: கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

08.50 PM: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இந்திய அரசியலின் மூத்தத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். கருணாநிதி இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி எல்லோரும் மருத்துவமனையில் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஆறுதல் சொன்னேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். கருணாநிதி அவர்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

7:00 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. வயது காரணமாக இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


6:15 PM: ராகுல் காந்தி சந்திப்பு புகைப்படம் மூலமாக கருணாநிதி உடல்நிலை பெரிய பின்னடைவில் இருந்து மீண்டிருப்பது புலனாகிறது. ராகுல் வருகை குறித்து அவரது காதுக்குள் ஸ்டாலின் கூறுவது அவரது உடல்நிலை மேம்பட்டிருப்பதற்கு இன்னொரு உதாரணம்! தவிர, அருகில் இருக்கும் மருத்துவ உபகரண அளவீட்டில் கருணாநிதியின் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அம்சங்கள் ஆரோக்கியமான அளவில் இருப்பதும் புலனாகிறது.

5:45 PM: கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படத்தை கருணாநிதியின் முகநூல் பக்கத்தில் திமுக வெளியிட்டது. ஏற்கனவே குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் வந்து சந்தித்த புகைப்படத்தை முன்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இது காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி வந்த பிறகு வெளியாகும் 2-வது புகைப்படம்!

5:30 PM: அதிமுக அனுதாபியாக அறியப்பட்ட நடிகை அம்பிகா இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் நலம் விசாரித்துச் சென்றார்.

5:00 PM : டோராடூனில் படப்பிடிப்பு முடிந்து இன்று இரவு 9 மணியளவில் சென்னை திரும்பும் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4:30 PM:கருணாநிதியை நலம் விசாரித்த ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனை முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கருணாநிதியை பார்க்க விரும்பி வந்தேன். தமிழ்நாட்டின் ஆத்ம பலம் அவர். சோனியா சார்பிலும் எங்கள் குடும்பம் சார்பிலும் வாழ்த்துகளை எடுத்து வந்தேன். அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் வலிமையான மனிதர், தமிழ் மக்களைப் போலவே!’ என குறிப்பிட்டார்.


4:25 PM: ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பிரமுகர்கள் மருத்துவமனை உள்ளே சென்றனர்.

4:15 PM: ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அங்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியை நலம் விசாரித்தார்.


ஏற்கனவே 2016 இறுதியில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டபோதும் ராகுல் காந்தி நலம் விசாரித்தார். அதன்பிறகு கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கோபாலபுரம் சென்று வாழ்த்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.

3:40 PM  : கருணாநிதி உடல்நிலையை விசாரிக்க சென்னை வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி. விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் அவர்!

2:05 PM: நடிகர் விஜயகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தனர்.

2:00 PM: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தாமாகவே சுவாசிக்கிறார்.’ என்றார்.

M Karunanidhi, Karunanidhi Health Today News, Karunanidhi Health, மு கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை, DMK Chief Karunanidhi, Karunanidhi at Kauvery Hospital

M Karunanidhi Health News Today:கருணாநிதியின் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜயகுமார்

1:15 PM:மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்தார். ‘திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார் அவர்.

12:40 PM: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘திமுக தலைவர் கருணாநிதி கோடிக்கணக்கான தொண்டர்களை பார்த்து உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என பேசுவார் என்று நம்புகிறேன். அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது’ என்றார்.

M Karunanidhi, Karunanidhi Health Today News, Karunanidhi Health, மு கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை, DMK Chief Karunanidhi

M Karunanidhi Health News Today:கருணாநிதியின் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகை குஷ்பூ

12:00 PM: கடந்த 28-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். 4-வது நாளாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டு தினமும் காவேரி மருத்துவமனையை சுற்றி வந்தனர். அவர்களில் பலரை நேற்று அழைத்த மு.க.ஸ்டாலின், ‘ஊருக்கு போய் வேலைகளைப் பாருங்கள்’ என அனுப்பிவிட்டார்.

11:00 AM: ராகுல் காந்தி மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் என காங்கிரஸ் வட்டாரங்களில் குறிப்பிட்டனர்.


10:30 AM:  “திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து ராகுல்காந்திக்கு நான் நாள்தோறும் அளிக்கும் தகவலின் அடிப்படையில் முடிவு எடுத்து சென்னை வருகிறார் “தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தகவல்

‘உயிரினும் மேலான உடன் பிறப்புகளே’ என கலைஞர் மீண்டும் பேசுவார்! – தலைவர்கள் நம்பிக்கை To Read, Click Here

10:10 AM: திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகை

10.00 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்று வெளியாக வாய்ப்பு என தகவல்

M Karunanidhi Health News Today: கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES:

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close