/tamil-ie/media/media_files/uploads/2017/09/MK-Stalin.jpg)
MK Stalin, chennai high court
பிரதமர் மோடி உட்பட 10 மாநில முதல்வர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பஞ்சாப், டில்லி, கேரளா, தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் அவரின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த கடித்தத்தில் ஸ்டாலின் கூறியிருப்பது, “ மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த ஆய்வு குழுவால், தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிரான 15வது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை திருத்தியமைக்க வேண்டும். 15 ஆவது நிதிநிலைப் பகிர்வின் ஆய்வு வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதற்கு எதிரான எனது கோரிகைக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். சமமான, நியாயமான நிதி கிடைக்க வழிவகுக்க வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
,
I have written to @CMOTamilnadu@VNarayanasami@vijayanpinarayi@ncbn@TelanganaCMO@siddaramaiah@Naveen_Odisha@MamataOfficial@ArvindKejriwal@capt_amarinder
— M.K.Stalin (@mkstalin) March 21, 2018
Regarding the unilateral decision of the centre which affects the fiscal autonomy of the states. #1 pic.twitter.com/w4ukCm566p
இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சரகத்துக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
,
I urge Hon'ble PM @narendramodi and Finance Minister @arunjaitely to modify the undemocratic ToR to XVFC and ensure financial justice to the progressive states. pic.twitter.com/b6gQV1hwPY
— M.K.Stalin (@mkstalin) March 21, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.