Tamil News in tamil: ஆளும் திமுக அரசிற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு முதல் தமிழக அரசின் திட்டங்களை ஆய்வு செய்தது வரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்படுகளில் மூக்கை நுழைத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் கொடுத்த விருந்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரசியல் புகுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன" என்று கூறியிருந்தார்.
'பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்' - அமைச்சர் பொன்முடி
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த கவர்னர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே கவர்னரின் கடமை. கவர்னரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது. இ
ந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த '-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்." என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.