தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“