/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-50.jpg)
MLA Karunas recovered from Coronavirus infection : திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸிற்கு கடந்த 5ம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடலில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக கூறி அவர் வீடியோ ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டார்.
10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்ற அவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தொகுதி மேம்பாட்டிற்காகவும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரண பணிகளில் கலந்து கொண்டதன் விளைவாகவும் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். தற்போது முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பியுள்ளேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்று கூறிக் கொள்கிறேன் என்று கூறிய அவர் நலம் விசாரித்த முதல்வர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பிரார்த்தனை செய்த தொகுதி மக்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அதில் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.