mla prabhu wife soundarya admk mla prabhu wife : கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்,
பிரபுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை சேர்ந்த அந்தப் பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் . அதில் தனது மகள் சவுந்தர்யா திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம். எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தை பேசி கடத்தி விட்டதாகவும் தெரிவித்தார் . மேலும் இது குறித்து போலீசில் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தன்னை சில பேர் மிரட்டுகிறார்கள். எனவே தன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு இடையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்று மணப்பெண் சவுந்தர்யா வீடியோ வெளியிட்டார் . மேலும் சவுந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்.எல்.ஏ பிரபுவும் விளக்கம் அளித்தார் .எனவே சாமிநாதன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ- பிரபு அவருடைய மனைவியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து நீதிமன்றத்தில் சவுந்தர்யா இன்று ஆஜரானார். தந்தையுடன் பேசிய பிறகு கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.சட்டவிரோதமாகக் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த நீதிமன்றம், சவுந்தர்யாவை அவருடைய கணவர் பிரபுவுடன் செல்ல அனுமதித்தது. இதையடுத்து சவுந்தர்யா கணவருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.மேலும் சவுந்தர்யாவின் தந்தை தொடர்ந்தஆட்கொணர்வு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil