10 ஆண்டுகால சாதனையை கூறி வாக்கு பெற முடியாத சூழலில் பிரதமர் இஸ்லாமியர்களை பற்றி வெறுப்பு அரசியல் செய்து வருவது தேர்தலில் எடுபடாது என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா புதுச்சேரியில் தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 44 நாட்கள் இடைவெளி விட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில் தென்மாநிலம் மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. இதனால் பிரதமர் வெறுப்பு அரசியலை தற்போது செய்து வருகிறார். இந்தியா கூட்டணி கட்சியினரை அதிகமாக சாடி பேசி வருகிறார் என்றார்.
இந்தியாவில் இஸ்லாமியர் பெண்களின் பிள்ளை பேறு விகிதம் அதிகரித்து வருவதாக பேசி வெறுப்பு அரசியலை மோடி செய்து வருகிறார் என கடுமையாக சாடிய ஜவாஹிருல்லா,10 ஆண்டுகால சாதனையை கூறி வாக்கு பெற முடியாத சூழலில் இஸ்லாமியர்களை பற்றி வெறுப்பு அரசியல் செய்து வருவது எடுபடாது என்றும் பாஜக மண்ணை கவ்வும் என்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“