‘என்னை பயன்படுத்துங்கள்; தமிழகம் மேம்படும்’ – மக்கள் நீதி மய்யம் ஓராண்டு நிறைவு விழாவில் கமல்

நான் என்னுடைய ஸ்ருதியை(அதாவது, Pitch என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) அதிகப்படுத்தி இருக்கிறேன்

Makkal Needhi Maiam, AMMK, Naam Thamizhar Katchi, NOTA votes
Makkal Needhi Maiam, AMMK, Naam Thamizhar Katchi, NOTA votes

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, “தமிழகமெங்கும்  மக்கள் நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவி உள்ளது. நியாயமான பிரசங்கங்களின் கணக்கு வழக்குகளுடன் மேலும் வலிமை பெறும். நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளது.

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி ஏறிக்கொண்டிருக்கிறது. அதை அடுத்து எங்கே ஏற்றி வைக்க வேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு தெரியும். தேர்தலில் தனியே நிற்கிறேன் என்றால், நான் அல்ல நாம். மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம்.


நான் பேசுவது புரியவில்லை என்று நேற்றுவரை சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். புரியக் கூடாது என்ற பிரார்த்தனையில் இருப்பவர்கள் அவர்கள். இன்று அவர்களுக்கு புரிய ஆரம்பித்ததற்கான காரணம், நான் என்னுடைய ஸ்ருதியை(அதாவது, Pitch என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) அதிகப்படுத்தி இருக்கிறேன்.

நீங்கள் நிரூபிப்பதற்கான அறிய வாய்ப்பு உங்கள் முன்னால் இருக்கிறது. அதில் ஒரு சிறிய கருவியாக நான் உங்கள் முன்னே நிற்கிறேன். இந்தக் கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகம் மேம்படட்டும், நாளை நமதே” என்று கமல் உரையாற்றினார்.

கட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

Web Title: Mnm first year anniversary kamalhaasan speech

Next Story
‘நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா’! – விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்vijayakanth Alliance 2019, DMDK Alliance, விஜயகாந்த், விஜயகாந்த் கூட்டணி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express