/indian-express-tamil/media/media_files/apN5A07e6r54XsiQ9Be7.jpg)
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கமலின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கமல் நேற்று ஈரோட்டில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
அதற்காக சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். கமலும் அதே ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று (மார்ச் 30) காலை கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். பிறகு கமல் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
#WATCH | Makkal Needhi Maiam founder Kamal Haasan meets Tamil Nadu CM and DMK President MK Stalin in Salem
— ANI (@ANI) March 30, 2024
(Video source: DMK) pic.twitter.com/INzq25qGpr
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.