TamilNadu Election News : மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல கட்டமைப்பு மாநிலச் செயலாளராக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் பதவி வகித்து வந்தார். தனது, தனிப்பட்ட காரணங்களால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்ததாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளரான ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முதல் கமீலா நாசர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரான நாசரின் மனைவி கமீலா நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து கட்சியின் இருந்து வந்தார். சினிமா தயாரிப்பாளராக இருந்து வந்த அவர், கடந்த மக்களைவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92,000 வாக்குகளுக்கும் மேல் பெற்று தோல்வியை தழுவினார்.
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மணு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த கமீலா, கடந்த வாரமே தனது ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியதாக மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படாததால் விரக்தியில் கட்சிச் பொறுப்புகளில் இருந்து கமீலா விலகியதாக தகவல் பரவி வந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், எனது சொந்தப் பணிகள் காரணமாகவே கட்சியில் இருந்து விலகி உள்ளேன். கடந்த நாள்களில் எனக்கு அரசியல் அட்சாரம் கற்றுத் தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil