திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகம் குப்பைகள் தேங்கி குப்பைகள் தரம் பிரிக்கும் கூடமாக காட்சியளிப்பது வேதனை அளிக்கின்றது என மக்கள் நீதி மய்யம் வேதனை தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளரும், வழக்கறிஞருமான கிஷோர்குமார் தெரிவிக்கையில், திருச்சி மாநகர காவல் எல்லையில் மரக்கடை பகுதியில் அமைந்துள்ளது திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகம். இந்த வளாகத்தில் தான் காவல் உதவி ஆணையர் அலுவலகம் மட்டுமல்லாது காந்தி மார்கெட் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் காவல் உதவி ஆணையர் வளாகத்தை நாம் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ...? இன்று மேற்படி காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகம் குப்பையும் கூளமுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது.
இது மட்டுமல்ல மேற்படி அலுவக மதில் சுவருக்கு வெளியே தொடர்ந்து சரக்கு லாரிகள் நிறுத்தப்படுவதால் அந்த மறைவிடத்தை பயன்படுத்தி கொண்டு அந்தப் பகுதியில் சிலர் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் துர்நாற்றம் காவல் நிலையம் வரை நீள்கிறது. ஆனால் பொதுமக்கள் தான் மூக்கை மூடிகொள்கிறார்கள். ஆனால் அங்கு பணியாறும் காவலர்களுக்கு பழகிவிட்டது போல...? கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
மேலும், உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக முறையற்று நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் அலுவலகத்திற்கு நடந்து செல்லவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த அளவிற்கு இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன.
இதற்கு முன்பு மேற்படி உதவி ஆணையர் அலுவலத்தில் காவல் துணை ஆணையருக்கான [குற்றம் மற்றும் போக்குவரத்து] அலுவலகமாக இருந்ததால் தினம், தினம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது பீமநகர் பகுதிக்கு துணை ஆணையர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தினம் தோறும் பல்வேறு பொதுமக்கள் வந்து செல்லும் கோட்டை காவல் உதவி ஆணையர் மற்றும் மிக முக்கியமான சட்டம் ஒழுங்கு காவல் நிலைய வளாகம் இன்று இப்படி கேட்பாறற்று குப்பையும், கூழமுமாகயிருப்ப தை பார்க்க கஷ்டமாக உள்ளது.
எனவே, திருச்சி மாநகர காவல் ஆணையர் உடனடியாக மேற்படி அலுவலகத்தை தூய்மைபடுத்துபவதோடு தொடர்ந்து பராமரிக்க சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வழக்கறிஞரும்,
மக்கள் நீதீ மய்யம் மாவட்ட செயலாளருமான கிஷோர்குமார் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்