தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மோக்கா புயலாக மாறி, வங்க தேசம் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவை, ஆசிய பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுகின்றன.
‘மோக்கா’ என்ற பெயரை ஏமன் நாடு முன்மொழிந்துள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரான மோக்காவை மையமாக வைத்து இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியின் தான் முதல் முறையாக காபி ஏற்றுமதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil