Nilgiris | L Murugan | Lok Sabha Election 2024: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, 39 தொகுதிகளுக்கும் அரசியல் வேட்பாளர்களை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால், சில தொகுதிகளில் 3 முனை போட்டியும், சில தொகுதிகளில் 4 முனை போட்டியும் நிலவுகிறது. அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 25 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்தது. இந்த புகாரின் பேரில் தேனாடுகம்பை போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும்படை அலுவலரான துணை தாசில்தார் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எல். முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நீலகிரி மாவட்ட பா.ஜ.க தலைவர் மோகன் ராஜ் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“