/indian-express-tamil/media/media_files/b6AXuAFySGeqcQxbo2O1.jpg)
கோயம்புத்தூரில் நடந்த நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சியில், பதினைந்திற்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன.
Coimbatore |மாணவர்களுக்கு ஆராய்ச்சியின் உந்துதல் பகுதிகள் மற்றும் அந்தந்த துறைகளில் புதிய ஆய்வுக் களங்கள் பற்றிய கல்வி வெளிப்பாட்டை வழங்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது.
இதில், முக்கிய அம்சங்களாக, கல்விசார் ஒத்துழைப்பை வளரத்தல், அதிநவீன ஆராய்ச்சியை ஊக்குவித்தல். இரட்டைக்கல்வித் திட்டங்களை வடிவமைத்தல், கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் சாத்தியமான கூறுகளைக் கண்டறிதல் போன்றவை அமைய பெற்றன.
இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தின் வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம்,துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரி சங்கர்,பதிவாளர் முனைவர் கவுசல்யா,டீன் முனைவர் வாசுகி ராஜா,துணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கவுரி ராமகிருஷ்ணன் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஸ்காட் ஹட்ரிமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, “இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களைப் பற்றிய விரிவான பார்வை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் அவினாசிலிங்கம் நிறுவனத்தில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியின் உந்துதல் பகுதிகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தபடுவதாக துணை வேந்தர் தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.