மோடி – சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்கலாம்.. சென்னை ஐகோர்ட் அனுமதி!

டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம்தான். விமான நிலையத்தில் வைக்க அனுமதிக்கபடுவதாக

By: Updated: October 3, 2019, 02:45:39 PM

modi china president welcoming banner : பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை வரவேற்று மத்திய, மாநில அரசு பேனர் வைத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா – சீனா இடையிலான இரு நாட்டு உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர்.இந்த சந்திப்பு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் விதிமீறல் பேனர் வழக்கில் அக்டோபர் 1ஆம் தேதி அரசு தாக்கல் செய்த உத்தரவாதத்தில் விதிமீறியோ பொதுமக்களுக்கு இடையூறாகவோ பேனர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். அதேசமயம்
இந்தியா – சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்புக்கு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்போவதாகவும் அதிலும் எவ்வித விதிமீறலும் இருக்காது என உத்தரவாதம் அளிக்கபட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாத உத்தரவுபடி பேனர்கள் தொடர்பாக உத்தரவாதம் தாக்கல் செய்துளோம். பிரதமர் நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்று 16 இடங்களில் பேனர் வைக்க உள்ளோம். பேனர் வைக்ககூடாது என்ற உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசு வைக்கும் பேனர்கள் மட்டுந்தான். எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்க மாட்டோம். சாலை மார்க்கமாக செல்ல இருப்பதால் பேனர் வைத்து வரவேற்க விரும்புகிறோம் என வாதிட்டார்.

திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த நிகழ்ச்சியை நாங்கள் வரவேற்கிறேம். அரசு சார்பில் வைக்க அனுமதி கோருவது என்பது எதிர்கால திட்டத்திற்கான மறைமுக திட்டத்துடன் அனுகியுள்ளனர். அதனால் அனுமதிக்க கூடாது. விதிகள் வகுக்கப்பட்டால் பொதுமக்கள் மதிப்பது போலத்தான், அரசும் பின்பற்ற வேண்டும். ஆளுங்கட்சி இதுவரை உத்தரவாதம் தாக்கல் செய்தவில்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்?திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் அப்படி எந்த பேனரும் வைக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

டிஜிட்டல் பேனர் அச்சகங்கள் தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ஞானதேசிகன்.டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம்தான். விமான நிலையத்தில் வைக்க அனுமதிக்கபடுவதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் – மத்திய,மாநில அரசு பேனர் வைக்க முடிவெடுத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை. பொதுமக்களுக்கு இடையூறாக வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் ஏதும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. விதிமீறல் பேனர் வைக்க மாடோம் என கடந்த டிசம்பர் உத்தரவாதம் தாக்கல் செய்ய சொன்னது அரசியல் கட்சிகளை மட்டும்தான்.

15×24 பேனர் அளவிலான வைக்கும்போது அதற்கான உரிய பாதுகாப்பு (support) உடன் வைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 21வது சரத்து வழங்கியுள்ள குடிமக்களின் தனிமனித வாழ்வுரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்காமல் பேனர் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Modi china president welcoming banner chennai high court granted permission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X