வாக்கிங் போன இடத்தில் குப்பை அள்ளிய மோடி வீடியோ!

கையில் எந்தவித கிளவுஸ் இல்லை, காலில் காலணிகள் அணியவில்லை மிகவும் இயல்பாக

By: Updated: October 12, 2019, 03:05:00 PM

modi cleanning beach video : மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மோடிக்கு வாழ்த்துக்களை கூறியதோடு மிகவும் எளிமையான பிரதமர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சென்னை மாமல்லபுரத்தில் சந்திக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மோடியும், ஜீ ஜின்பிங்கும் நேற்று சென்னை வந்தனர். இதற்காக மிகப் பெரிய அளவில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. வரவேற்புகள் பிரம்மாண்டமாக நடந்தன. பல்வேறு அலங்கார விளக்குகளால், மாமல்லபுரம் அலங்கரிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிகள் முடிந்து இன்று காலை கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு கடற்கரையில் இருந்த குப்பைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் நடைபயிற்சி செய்து கொண்டே, வெறும் கைகளால் குப்பைகளை அகற்றினார். சுமார் அரை மணி நேரம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

கையில் எந்தவித கிளவுஸ் இல்லை, காலில் காலணிகள் அணியவில்லை மிகவும் இயல்பாக மோடி குப்பைகளை அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Modi cleanning beach video pm modi cleanning kovalam beach video images

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X