கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 15,2024) கலந்துகொண்டார். அப்போது, “எனது அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே. வணக்கம்” என தனது பேச்சைத் தொடங்கினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை, கு. அண்ணாமலை தமிழாக்கம் செய்தார்.
தொடர்ந்து, “பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை நீங்கள் மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். மொபைல் போனில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருக்கிறீர்கள். நான் உங்களுடன் தமிழில் பேச நினைக்கிறேன்” என்றார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நாம் கைகளை உயர்த்திக் காட்ட வேண்டும்” என்றார்.
இதையடுத்து, “பாரத் மாதா கி ஜெய்.. வணக்கம் எனக் கூறி மோடி தனது பேச்சை நிறைவு செய்தார்.
முன்னதாக பிரதமர் மோடி தனது பேச்சின்போது, “கன்னியாகுமரியில் இருந்து ஒரு பேரலை கிளம்பியுள்ளது; இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக அரசின் ஊழல் குடும்ப ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
நாட்டை துண்டாக நினைத்தவர்களை ஜம்மு காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். அதேபோல், தமிழ்நாட்டு மக்களும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை துடைத்தெறிய வேண்டும்.
மேலும் இந்தக் கூட்டணியிடம் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை; இவர்களின் ஒரே நோக்கம் நாட்டை கொள்ளையடிப்பதே.
2ஜி ஊழலில் தி.மு.க பெரும் பங்கு வகித்தது. அப்படி, இண்டியா கூட்டணியின் ஊழல் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். சுரங்க ஊழல், நிலக்கரி ஊழல் என அந்தப் பட்டியல் நீண்டது” என்றார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“