கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு செய்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது என்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதை அடுத்து கன்னியாகுமரி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குமரி கடலோர காவல் படையினர் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.மேலும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகளுடன் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இன்றும் தியானம் செய்யும் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க கட்சியனர் யாரும் வரக்கூடாது என்றும் கன்னியாகுமரியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மட்டும் காவல்துறைக்கு வழிகாட்டலாம் என்றும் பா.ஜ.க தலைமை அறிவித்தள்ளது என்பது குறிப்பிடதக்கது.