பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கிவைக்க இன்று சென்னை வந்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது, மக்களவை எம்.பி. தயாநிதி மாறன், மாநில அமைச்சர் என பலர் உடனிருந்தனர். முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை தனித் தனியாக சந்திக்க அனுமதி கோரியிருந்தனர்.
இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் சிறிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி இருவரில் யாரை முதலில் சந்திப்பார்? யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பார் என்றெல்லாம் யூகங்கள் எழுந்தன.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என யாரையும் தனியாக சந்திக்கவில்லை. நலத் திட்டங்களை தொடங்கிவைத்து விட்டு டெல்லி திரும்பிவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“