/indian-express-tamil/media/media_files/2025/07/26/thiruvallur-child-abuse-2025-07-26-07-07-29.jpg)
Today Latest Live News Update in Tamil 6 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோடி வருகை: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தர உள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
Jul 26, 2025 22:13 IST
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டான்லி அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
Jul 26, 2025 21:57 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - வருவாய் இழப்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, கடலுக்கு செல்ல தடை காரணமாக பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jul 26, 2025 21:04 IST
காரையாறு வனப்பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
காரையாறு வனப்பகுதி மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா, முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
Jul 26, 2025 20:58 IST
வினாத்தாள் மோசடியால் இளைஞர்கள் எதிர்காலம் பாதிப்பு
''கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
-
Jul 26, 2025 20:36 IST
கல்லூரி மாணவர்கள் தங்கிய பகுதிகளில் போலீஸ் சோதனை
கூடுவாஞ்சேரி SRM கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் கஞ்சா பயன்பாடு குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 26, 2025 20:06 IST
உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன் படி கடந்த 2 நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதே சமயம் பனி மூட்டமும் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கினர். இதற்கிடையே பலத்த காற்று மற்றும் மழை காரணமாக காட்சி முனை, பைன் பாரஸ்ட், tree park ஆகிய சூழல் சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
-
Jul 26, 2025 20:01 IST
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
திருப்பூர் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, அருவிக்கு செல்லும் வழித்தடம் அடைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 26, 2025 19:47 IST
சிவகங்கை முழுவதும் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில், 29ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மற்றும் காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில், முக்குலத்தோர் கூட்டமைப்பின் சார்பில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், விழுப்புரத்தில் நடைபெற்ற ரோட்ஷோவில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'நான் ஆட்சிக்கு வந்தவுடன் 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு மீண்டும் வழங்குவேன்' என்கிறார். இது தேவர் சமுதாயத்தை அழிக்க எடப்பாடி அணி திட்டமிடப்பட்ட சதியாகும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிப்போம். தேவர் இனமே சிந்திப்பீர்!" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர்களால் சிவகங்கை மாவட்ட அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Jul 26, 2025 19:46 IST
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 26, 2025 19:36 IST
மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை: மு.க.ஸ்டாலின்
மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லையென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். திமுக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்த போது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன் என்று தனது எக்ஸ் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 26, 2025 19:27 IST
ஆசிய கோப்பை டி.20 – செப்.9ல் தொடங்குகிறது
ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் போட்டிகள் செப்.9 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் செப். 14ல் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. போட்டி தேதிகளை உறுதிப்படுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தகவல் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் டி.20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
-
Jul 26, 2025 18:56 IST
த.வெ.க.வினருக்கு கட்சித் தலைமை முக்கிய உத்தரவு
தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெகவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் முதல், நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் வரை அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் தங்கள் கழகப் பணிகளின் போது, வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 26, 2025 18:55 IST
”கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள்”
சட்டவிதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். கோயில் நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள கோயில் உபரி நிதியை பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
-
Jul 26, 2025 18:42 IST
"தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை"
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது போதையிலிருந்த கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 26, 2025 18:37 IST
திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் களப்பணிகள் குறித்தும் திமுக மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டறிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
Jul 26, 2025 17:47 IST
"வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி"
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டதும், ஒரு நீதிபதியின் மீதான புகாரை அவரே விசாரிப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது. அதேபோல், விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் "நீ ஒரு கோழை" என்று வழக்கறிஞரை குறிப்பிட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, நீதிகேட்டு புகார் அளித்த ஒரு வழக்கறிஞரை குற்றவாளி போல் பாவிப்பதையும், நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவதையும் ஏற்க முடியாது. மேலும், ஆதாரங்களுடன் புகார் அனுப்பியுள்ளதாக புகார்தாரர் தெரிவித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
-
Jul 26, 2025 17:45 IST
இரண்டாவது நாளாக தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்
அன்புமணி ராமதாஸின் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ இரண்டாவது நாளாக செங்கல்பட்டில் தொடங்கியது.
-
Jul 26, 2025 17:01 IST
கீழடி வீடியோவை வெளியிட்டது திமுக.
இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி. பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ள நிலையில் கீழடி தொடர்பான வீடியோவை வெளியிட்டது திமுக.
KEEZHADI
— DMK (@arivalayam) July 26, 2025
A site that rewrites the ancient story of India.
A past waiting to be unearthed, studied, and celebrated.
A living testament to Tamil Nadu’s timeless contribution to the world.
Keezhadi is not just history - it is heritage.
A legacy that belongs to all of India.
A… pic.twitter.com/4ZBanJB653 -
Jul 26, 2025 17:00 IST
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரின் பெயர் வெளியானது. கைது செய்யப்பட்டவர் ராஜு பிஸ்வ கர்மா என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Jul 26, 2025 16:58 IST
ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்பனை ? - 4 பேர் கைது
கடலூர், நெய்வேலியில் ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்க முயன்ற 4 பேரை மாறுவேடத்தில் சென்று போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டது உண்மையான இரிடியமா?, அல்லது போலி இரிடியமா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Jul 26, 2025 16:39 IST
தோட்டத்தில் பதுங்கி இருந்த 20 அடி நீள மலைப்பாம்பு
தேனி: கம்பம் அருகே விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்த 20 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்த வனத்துறையினர்.
வீடியோ: சன் நியூஸ்
#WATCH | தேனி: கம்பம் அருகே விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்த 20 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்த வனத்துறையினர்.#SunNews | #Theni pic.twitter.com/AUlJyAup9B
— Sun News (@sunnewstamil) July 26, 2025 -
Jul 26, 2025 16:36 IST
கோவை மருதமலையில் முருகன் சிலை: வனத்துறை பதிலளிக்க உத்தரவு
கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி வன விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் வழக்கில், வனத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன எனவும், முருகன் சிலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. -
Jul 26, 2025 15:45 IST
அன்புமணி நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் நடைபயணம் விதிமீறல், கண்டிக்கத்தக்கது என பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், வட தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவதற்கு காரணமாக நடைபயணம் அமையும் நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2025 15:14 IST
நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு குறித்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர் கருத்து
வாஞ்சிநாதன் மீது கொடுக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நோட்டீசை நீதியரசர் சுவாமிநாதன் திரும்பப் பெற வேண்டும். ஜனநாயகத்தின் குரல் வளையத்தை நசுக்கும் வகையில் நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு உள்ளது என தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நா.மாரப்பன் கூறியுள்ளார்.
-
Jul 26, 2025 15:10 IST
ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்: விசாரணைக்கு கேரளா அரசு உத்தரவு
கேரளா கண்ணூர் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jul 26, 2025 15:08 IST
என்னை கொல்ல முயற்சி: விஷால் பட நடிகை புகார்
திரைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த `Me Too' விவகாரத்தில் குரல் கொடுத்த பின்னர் என்னை சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. காரில் பிரேக் ஃபெயிலியர், உணவில் விஷம் கலக்க முயற்சி என என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணருகிறேன்`தீராத விளையாட்டுப் பிள்ளை' நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.
-
Jul 26, 2025 15:07 IST
அஜித்குமார் வழக்கு: சித்தி மகளிடம் சிபிஐ விசாரணை
திருப்புவனம், போலீசார் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில்,
அஜித்தின் சித்தி மகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளனர்.அஜித்குமார் கொலை குறித்து சித்தி மகள் அளித்த பேட்டி வைரலான நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். -
Jul 26, 2025 13:54 IST
சிறுமி வன்கொடுமை - ஹோட்டலில் விசாரணை
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞரை அவர் வேலை பார்த்த ஆந்திரா சூலூர்பேட்டை ஹோட்டலுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 26, 2025 13:27 IST
ரூ.12 லட்சத்திற்கு குழந்தை பேரம் - விசாரணை
சென்னையை அடுத்த புழல் அருகே ஆண் குழந்தையை ரூ.12 லட்சத்திற்கு விற்க முயன்ற விவகாரம். குழந்தையை விற்க முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 ஓரை வலை வீசி தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அனுராதா, பிரேமா ஆகிய 2 பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 26, 2025 13:00 IST
தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல: தமிழிசை
தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல; நமது பெரிய புராணம் ஆன்மிகத் தமிழ், காவி தமிழ் தான் 4 வருடத்தில் செய்ய முடியாததை 45 நாட்களில் எப்படி திமுகவால் செய்ய முடியும் தமிழக மருத்துவமனை தரம் வாய்ந்தது எனில் முதல்வர் ஏன் அங்கு செல்லவில்லை? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
Jul 26, 2025 12:50 IST
பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை மனு
தமிழகம் வரும் பிரதமருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தங்கம் தென்னரசு வழங்குவார். மருத்துவமனையில் இருப்பதால், கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். தலைமைச் செயலரிடம் கோரிக்கை மனுவை பெற்று, பிரதமரிடம் தங்கம் தென்னரசு அளிப்பார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jul 26, 2025 12:30 IST
சிறுநீரக விற்பனை முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை :மருத்துவ இயக்குநரகம்
இடைத்தரகர் மூலம் சிறுநீரகம் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏழைகளை குறிவைத்து சிறுநீரக விற்பனை முறைகேட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆசை வார்த்தை கூறும் இடைத்தரகர்கள் மீது நம்பிக்கை வைத்து சிறுநீரகம் உறுப்பு தானம் செய்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2025 12:13 IST
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்படும் இளைஞர்
திருவள்ளூர், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்கின்றனர் போலீசார்.
-
Jul 26, 2025 11:57 IST
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார். இம்முடிவு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இம்முடிவு வழிவகுக்கும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மெக்ரான் கடிதம் எழுதி உள்ளார்.
-
Jul 26, 2025 11:43 IST
தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு மோடி வருவது வழக்கம்தான் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது வழக்கம்தான் என்றும், தமிழ்நாட்டில் பாஜகவினால் எப்போதும் காலூன்ற முடியாது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
Jul 26, 2025 11:27 IST
இயக்குநர் அம்ரநாத் ராமகிருஷ்ணன் உரை!
அகழ்வாய்வு குறித்து தொல்லியல் துறை கேட்ட அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டு விட்டது என டெல்லியில் நடைபெற்ற விழாவில் தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உரையாற்றியுள்ளார். தற்போது நடந்திருப்பது ஒரு முதன்மையான ஆய்வு என்றும் இந்த ஆய்வு அறிக்கை மத்திய தொல்லியல் துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் அது பல தொடர் ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Jul 26, 2025 11:02 IST
நமது ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் - ஸ்டாலின் பதிவு
நமது தாய்நாட்டை காக்க இன்னுயிரை தந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நமது ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்,”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
On this #KargilVictoryDay, tribute to the brave soldiers who defended our motherland with unmatched courage and laid down their lives.
— M.K.Stalin (@mkstalin) July 26, 2025
Their valour and sacrifice will never be forgotten. pic.twitter.com/xG4Oqh4b9t -
Jul 26, 2025 10:48 IST
சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து
சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரை இருக்கும் 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழாயை மற்றொரு குழாயுடன் இணைக்கும் பணியால் குடிநீர் விநியோகம் ரத்து என அறிவிக்கப்பட்டுளள்து. இந்த 3 நாள்களில் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 26, 2025 10:42 IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86.52 ஆக சரிந்துள்ளது.
-
Jul 26, 2025 10:29 IST
மாணவர்களின் தற்கொலைகள் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கல்வி நிலையங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க வழிகாட்டுதல்களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"100-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட கல்வி நிலையங்கள், மன நல ஆலோசகரை நியமிக்க வேண்டும். கல்வி நிலைய வளாகங்கள், விடுதிகள், இணையத்தில் த*கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும். மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப பிரிப்பது, அவமதிப்பதை தடுக்க வேண்டும்" என்றும் உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில் கூறியுள்ளது.
-
Jul 26, 2025 10:18 IST
மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்
இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்கவு உள்ளார். அவருடன் சேர்ந்து கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் மோடியை சந்திக்கிறார்கள்.
-
Jul 26, 2025 09:35 IST
சிறுமியை வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம்
திருவள்ளூர் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஐஜி, டி.எஸ்.பி, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
Jul 26, 2025 09:30 IST
தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.73,280க்கும், கிராம் ரூ. 9,160க்கும் விற்பனையாகிறது.
-
Jul 26, 2025 09:12 IST
அரியலூரில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றம்
அரியலூரில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் காரணமாக ஹெலிகாப்டர் உயர் மின்னழுத்த கம்பிகள் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல். தற்போது பொன்னேரியில் ஹெலிகாப்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
Jul 26, 2025 08:39 IST
நடைபயணத்திற்கு தடை இல்லை - பாமக வழக்கறிஞர் பாலு
அன்புமணியின் தமிழக உரிமை மீட்பு பயணத்திற்கு தடையில்லை. நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதித்ததாக வெளியான செய்திக்கு அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
-
Jul 26, 2025 08:20 IST
கைது செய்யப்பட்டவரின் புகைப்படம் வெளியீடு
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இளைஞரிடம் போலீசார் 2ஆம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-
Jul 26, 2025 08:18 IST
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு 4,711 கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
Jul 26, 2025 08:16 IST
கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி: முர்மு
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். கார்கில் நினைவு தினம் நமது வீரர்களின் அசாதாரண தைரியம் உறுதியை குறிக்கிறது. வீரர்களின் அர்பணிப்பு, தேசத்திற்கான தியாகம் என்றென்றும் மக்களை ஊக்குவிக்கும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
Jul 26, 2025 07:55 IST
ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது கொலை வெறி தாக்குதல்
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18ம் தேதி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன்(53) மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
Jul 26, 2025 07:54 IST
மக்களின் குறைதீர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்!'
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் கடந்த 15 ஆம் தேதி முதல் இதுவரை 96,739 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக 59,483 நபர்கள் விண்ணப்பங்களை வழங்கி உள்ளனர். இதர 13 துறைகளின் சேவைகளுக்காக 37,256 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.