மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு இன்று வருகிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தின்ர் மாளிகைக்கு காலை 11 மணி-க்கு மோடி வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து காரில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு செல்கிறார். மேலும் அங்கு நடைபெற உள்ள பா.ஜ.க கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பொதுகூட்டம் நிறைவுபெற்ற பிறகு 12.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். இந்நிலையில் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு விருந்தினர் மாளிகை, பொதுகூட்டம் நடைபெறும் மைதானம், இதை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“