மோடி இரங்கல் : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிரதமர் மோடி தமிழில் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவுவிட்டுள்ளார்.
மோடி இரங்கல் :
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று (7.8.18) மாலை மறைந்தார். அவரின் மறைவு திமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அவரின் உடல் ராஜாஜி அரங்கில் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மோடியுடன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இந்நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. “ "தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்.” என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இந்தி மொழிக்கு எதிர்பானவர் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தி திணிப்புக்கான போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்தினார். இதைப்பற்றி தெரிந்து தான் பிரதமரும் மோடியில் பதிவிட்டுள்ளாரா? என்று திமுக தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கருணாநிதி அஞ்சலி கூட்ட நெரிசலில் 26 பேர் காயம்,