2-வது நாளாக இன்று முக்கிய பேச்சுவார்த்தை: நிகழ்ச்சிகள் முழு விவரம்
நேற்று, இரவு 9.40 மணிக்கு மேல் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்குத் சீனா அதிபர் திரும்பினார். இன்று, காலை 9. 05 மணிக்கு பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ரிசார்ட்டுக்கு சாலை மார்க்கமாக புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு நேற்றும், இன்றும் நடந்தி வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று மாலை 5 மணி அளவில் மாமல்லபுரம் வந்தார். பிரதமர் நரேந்திர மோடி சீனா அதிபரை வரவேற்றார். கடற்கரை கோவில் பகுதியில் மாலை 6 மணிக்கு நடந்த கலை நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Advertisment
பிறகு ஏழு மணி அளவில் இந்தியப் பிரதமரின் சார்பில் சீனா அதிபருக்கு இரவு விருந்து வழங்கப்பட்ட்டது. பின் இருதலைவர்களும் வர்த்தக உறவு, தெற்காசிய பிராந்திய அமைதி போன்றவைகளை இரவு 9.40 மணி வரக்கை விவாதித்தனர். இரவு 9.40 மணிக்கு மேல் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்குத் சீனா அதிபர் திரும்பினார்.
பிரதமர் மோடி - ஜீ ஜிங்பின் சந்திப்பு
இந்நிலையில், இன்று( அக்டோபர் 12 ) சீனா அதிபரின் இந்தியச் சுற்றுபயணம குறித்த முழு தகவல்களை இங்கே காணலாம்.
இன்று, காலை 9. 05 மணிக்கு பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ரிசார்ட்டுக்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங் கிண்டி சோழா ஓட்டலில் இருந்து சாலை மார்க்கம் வழியாக புறப்படுகிறார்.
திட்டமிட்டபடி , காலை 9.55 மணிக்கு கோவளம் ரிசார்ட் சென்றடைவர்.
காலை 10 மணியிலிருந்து 10.40 வரை மக்கான் பகுதியில் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார் .
காலை 10.50 மணி முதல் 11.45 வரை டாங்கோ ஹாலில் முக்கியப் பிரதிநிதிகளுடன் சீனா அதிபர் சந்தித்து பேசுகிறார் .
காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரை சீன அதிபர் ஜீ ஜின்பிங் மதிய உணவில் கலந்து கொள்கிறார் ( காஸ்வான்னியா ஹால்).
பிற்பகல் 12.45 மணி சென்னை விமான நிலையத்துக்கு சாலை மார்க்கம் வழியாக புறப்படுகிறார்.
திட்டமிட்டபடி, பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார்.
பிற்பகல் 1.25 மணி முதல் 1.30 வரை முக்கியப் பிரமுகர்களை வழியனுப்பும் விழா நடைபெறுகிறது.
பிறகு , 1.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து நேபாளத்தை நோக்கிப் பயணிக்கிறார் சீனா அதிபர் ஜீ ஜின்பிங்.