Modi-Xi Jinping Mamallapuram summit, Day 2: இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று 2-வது நாளாக பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார். காலை 9. 40 மணி அளவில் பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ரிசார்ட்டுக்கு சீனா அதிபர் ஜீ ஜின்பிங் கிண்டி சோழா ஓட்டலில் இருந்து சாலை மார்க்கம் வழியாக புறப்பட்டார்.
பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றனர். அப்போது, இரு நாடுகளில் உயர்மட்ட குழுவினரும் இதில் பங்கேற்கின்றனர். அதில், வங்கதேசம்- சீனா - இந்தியா - மியன்மர் நாடுகளை இணைக்கும் தாழ்வார திட்டம் மற்றும் இந்தியா, சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு
பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு சுமார் 12.45 மணிக்கு, மீண்டும் சென்னை திரும்பும் ஷி ஜின்பிங், 1.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் நேபாளத்திற்கு செல்கிறார்.
Live Blog
Modi - Xi Jinping 2nd Day Meet in Tamil Nadu live updates : பிரதமர் மோடியை இரண்டாம் நாளாக சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கிறார். இந்திய தலைவர்களின் பங்கேற்பு போன்ற இன்றைய நிகழ்ச்சி நிரல்களின் அனைத்து தகவல்களையும் இங்கு நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க : Chennai, Tamil Nadu News Live Updates: Modi, Xi to meet at Taj Fisherman’s Cove today
2 நாட்களாக சுற்றுப்பயணமாக பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்திருந்தனர். இவர்களின் வருகையையொட்டி மகாபலிபுரம் தூய்மையாக்கப்பட்டது. இதனைக்குறிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி- ஜின்பிங் வருகையால் மாமல்லபுரம் இப்போது, தூய்மை நகரமாகி விட்டது என்று சுட்டிக் காட்டினார்.
இரண்டு நாட்கள் சுற்றுபயணமாக சென்னை வந்த மோடியை சிறப்பான விருந்தோம்பலுடன் அதிமுக அமைச்சர்கள் வழியனுப்பி வைத்த வீடியோவை முதல் எடப்பாடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அண்டை நாடுகளான இந்தியா - சீனா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வழியனுப்பி வைத்தார். pic.twitter.com/saSr2uCYJh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 12, 2019
மோடியின் வருகை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் பெருமிதம் கொண்டுள்ளார். “ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமிழர்களின் பெருமையை உயர்த்திக்காட்டும் வகையில் செயல்படுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பில் தமிழக உணவுகள் அதிகளவில் பரிமாறப்பட்டு கவுரவம் தரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, ”சீனாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். சீன அதிபர் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பயங்கரவாத ஒழிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை . சென்னையில் சீனாவின் துணை தூதரகம் அமைப்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்ததால், துணை தூதரகம் குறித்து விவாதிக்கவில்லை . எல்லை பிரச்சினை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.” என தெரிவித்தார். ” என கூறினார்.
சென்னை வந்த பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சுற்றுப்பயணம் இனிதே முடிவடைந்த நிலையில் இருவரின் சந்திப்பு குறித்து வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார். இதுக் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் முழு தகவல்கள். “வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகம் ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை வரவேற்றுள்ளோம். இரு நாடுகளின் சந்தையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்க இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இருக்கும் என நம்புகிறோம். ” என்று கூறினார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய் டாங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி - சீன அதிபர் இடையிலான 2 வது முறைசாரா உச்சி மாநாடு ஒரு பெரிய வெற்றியாகும் . இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சீனா-இந்தியா உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என்றும் சன் வெய் டாங் கூறியுள்ளார்.
The 2nd Informal Summit between President Xi & Prime Minister Modi is a big success. I wish to thank Indian Government and Tamil Nadu government for their gracious hospitality. Under strategic guidance of our leaders, China-India ties will enter a new era. pic.twitter.com/HhHo41UW1C
— Sun Weidong (@China_Amb_India) October 12, 2019
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும். pic.twitter.com/UmfVyP3iuQ
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
பிரதமர் மோடி, சென்னைக்கு வருகை தந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்-க்கு மோடி ட்விட்டரில் தமிழில் நன்றி கூறினார்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
திருவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்டார் பிரதமர் மோடி. தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு நன்றி என்றும் தமிழில் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜீ ஜின்பிங். தமிழகம் கொடுத்த மிகப் பெரிய வரவேற்பு தனக்கு மகிழ்ச்சி அளித்தாக பிரதமர் மோடியிடம் ஜீ ஜின்பிங் கூறியதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
கோவளத்திலிருந்து கிளம்பிய சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சீன அதிபர், பிரதமர் மோடி ஆகியோரை வழி அனுப்பி வைக்க, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறுமுகையில் தயாரான ஜின்பிங் உருவம் பொறித்த சால்வையைப் பரிசளித்தார். அப்போது இருநாட்டு தலைவர்களும் அதனைப் பார்த்து ரசித்தனர்.
#JUSTIN கோவை சிறுமுகையில் தயாரான ஷி ஜின்பிங் உருவம் பொறித்த சால்வையை சீன அதிபரும் பிரதமர் மோடியும் பார்த்து ரசித்தனர் #PMModi #XiJingping #PMModi_XiJingPing_Meet pic.twitter.com/IwCRO03UlQ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 12, 2019
2 நாட்களாக இந்தியர் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திப்பு நடத்தினர். இன்று காலை 10.15-க்கு மீண்டும் கோவளம் சென்ற சீன அதிபர், தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடியை சந்தித்தார். தனிப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, அதிகாரிகளுடன் கூடிய பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டனர். தற்போது அந்த பேச்சு வார்த்தை முடிந்து, கோவளத்திலிருந்து கிளம்பியிருக்கிறார் சீன அதிபர்.
பேச்சு வார்த்தையின்போது, “இரு நாட்டு உறவும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்டது என்றும், உஹான் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் உறுதி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சீன அதிபரை தமிழ்நாட்டிற்கு மனதார வரவேற்கிறேன்” என்றார்.
மோடியின் வரவேற்பைத் தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழரின் விருந்தோம்பலையும், வரவேற்பையும் பார்த்து தாம் புளங்காகிதம் அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில், “மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழில் வரவேற்றார் பிரதமர் மோடி. அப்போது, உலகத்திலேயே தொன்மையான மொழியான தமிழை தான் பேசுவதாகவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் வரவேற்றார்.
கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடியும் - சீன அதிபர் ஜின்பிங்கும் ஆலோசித்தனர். அந்த ஆலோசனைக்கு பின் தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் இருந்து கடற்கரையை இருவரும் ரசித்து பார்த்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் பேட்டரி காரில் புறப்பட்டு, பேச்சு வார்த்தையை தொடங்கியிருக்கிறார்கள்.
இரண்டு பலமான நாடுகள் இடையே நட்பு இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதனால் இருநாடுகளிடையே எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது, எனவே இந்த சந்திப்பு பாராட்டப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓ.எம்.ஆர் சாலை வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில், பெரும்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.
காலை 7 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் வேறெந்த பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்ததில்லை என்றும், தமிழரின் பண்பாட்டு உடையான வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடிக்கு தன் பாராட்டுகள் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ளார்.
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது!@narendramodi pic.twitter.com/pMKUYXFKGH
— SP Velumani (@SPVelumanicbe) October 12, 2019
இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கோவளம், தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
#JUSTIN காஞ்சிபுரம்: கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் அழகான கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை #PMModi #XiJingping #PMModi_XiJingPing_Meet pic.twitter.com/mXUbMWfTxj
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 12, 2019
கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலை பேட்டரி காரில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் உள்ள அழகான கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் வர்த்தகம், ராணுவம், எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து மோடியும் ஜின்பிங்கும் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
பிரதமர் மோடியை 2-வது நாளாக சந்திக்க பிரத்யேக காரில் கோ வளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் இருந்து ஜின்பிங் புறப்பட்டதையொட்டி சாலைகளில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. சாலைகளின் இருபுறமும், இரு நாட்டு கொடிகளை ஏந்தி, மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இன்று காலை கடற்கரையில் புத்துணர்வான நடைப்பயிற்சியை மேற்கொண்டார் பிரதமர் மோடி. அந்த படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Refreshing walk and exercises in Mamallapuram, along the scenic coast. pic.twitter.com/UjUq8FbVAv
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
மாமல்லபுரத்தில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை கடற்கரையில் நடைப்பயிற்சியை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கையுறை அணியாமல் கைகளால் அள்ளினார். அப்போது அவர் காலணியும் போடவில்லை. மொத்த குப்பைகளையும் அள்ளி ஒரு கவரில் போட்டு, அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் தான் கொடுத்ததாக, அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மோடி.
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம் முதல் கோவளம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை வழியாக செல்ல கூடிய வாகனங்கள், மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து அடையாறு வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது.
சென்னை கிண்டியில் இருந்து கோவளத்துக்கு காரில் செல்கிறார் ஜி ஜின்பிங். அங்கு பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரு நாடுகளில் உயர்மட்ட குழுவினரும் இதில் பங்கேற்கின்றனர். அப்போது, வங்கதேசம்- சீனா - இந்தியா - மியன்மர் நாடுகளை இணைக்கும் தாழ்வார திட்டம் மற்றும் இந்தியா, சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், ஏழு மணி அளவில் இந்தியப் பிரதமரின் சார்பில் சீனா அதிபருக்கு இரவு விருந்து வழங்கப்பட்ட்டது. பின் இருதலைவர்களும் வர்த்தக உறவு, தெற்காசிய பிராந்திய அமைதி போன்றவைகளை இரவு 9.40 மணி வரக்கை விவாதித்தனர். இரவு 9.40 மணிக்கு மேல் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலுக்குத் சீனா அதிபர் திரும்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights