மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கவிருந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க வருகை தந்த பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு அணிந்த படி மாமல்லபுரம் வந்தடைந்த மோடி. மாமல்லபுரத்தின் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார்.
வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டுடன் வருகை தந்த, சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு கைக்குலுக்கி பேசினர். பிறகு, மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிற்பங்களை சீன அதிபருக்கு மோடி விளக்கிக் கொண்டிருக்கிறார்.
11, 2019
வெண்ணைய் உருண்டை பார்வையை பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் பார்த்து ரசித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a11-300x200.jpg)
அப்போது, இரு தலைவர்களுக்கும் கைகளை உயர்த்தி போஸ் கொடுத்தனர்.
11, 2019
வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதிக்குச் சென்ற மோடி - ஜின்பிங், நாற்காலியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் இளநீர் பருகினர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a10-1-300x200.jpg)
தொடர்ந்து, இன்று மாலை இரு நாட்டுத் தலைவர்களும் குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்து பேசுகின்றனர்.