Advertisment

மோடி - ஜின்பிங்கை வரவேற்க கலைநயத்துடன் காத்திருக்கிறது மாமல்லபுரம்

Modi-Xinping summit : சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, 7 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வழிநெடுகிலும் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi-Xi Summit, Narendra Modi, Xi Jinping, xi jinping in china, Mahabalipuram, Mamallapuram, Security in Mahabalipuram, East Coast Road, ECR, Chennai city News, Indian Express News

Modi-Xi Summit, Narendra Modi, Xi Jinping, xi jinping in china, Mahabalipuram, Mamallapuram, Security in Mahabalipuram, East Coast Road, ECR, Chennai city News, Indian Express News, சென்னை, மாமல்லபுரம், மோடி - ஜின்பிங் சந்திப்பு, பாதுகாப்பு, கிழக்கு கடற்கரை சாலை, கலைநிகழ்ச்சிகள்

Arun Janardhanan

Advertisment

சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, 7 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வழிநெடுகிலும் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 9 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஏர் இந்தியா கார்கோ விமானத்தில் புல்லட் புரூப் வசதி கொண்ட நான்கு நவீன பாதுகாப்பிலா கார்கள், சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ளன. ஜி ஜின்பிங்குடன் சேர்த்து 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னை வர உள்ளனர்.

சென்னை விமானநிலையத்திலிருந்து கிண்டி நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் இவர்கள், பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்ல உள்ளனர். மாமல்லபுரம் செல்லும் வழியில் 6,800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்பிற்காக 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் போலீசார், மற்ற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

publive-image

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் மற்றும் பிரதிநிதிகளின் உயர்மட்ட பாதுகாப்பிற்காக, 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான 34 அதிகாரிகள் கொண்ட குழுவை, தலைமைச்செயலாளர் சண்முகம் அமைத்துள்ளார். இவர்கள், சென்னை விமானநிலையத்திலிருந்து மாமல்லபுரம் கடற்கரை கோயில்வரையிலான இடங்களில் உயர்மட்ட பாதுகாப்பு அளிப்பர்.

பிரதமர் மோடி - ஜி ஜின்பிங்கை மகிழ்விக்கும் வகையில், பாரம்பரிய மற்றும் கலாச்சார கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதற்காக, அவர்கள் கடைசிநேர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி - ஜி ஜின்பிங், மாமல்லபுரம் வருகையையொட்டி, பல்வேறு கட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகின்றன. சுற்றுலாப்பயணிகளின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கோயிலுக்கு அருகே செயல்பட்டு வந்த கடைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள், 3 கி.மீக்கு முன்னதாகவே நிறுத்தப்பட உள்ளன.

மாமல்லபுரம் கடற்கரை ரிசார்ட்டில், சீன அதிபர் ஜின்பிங் தங்குவதாக இருந்தது. கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் இருப்பதால், அவர் தங்கும் இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறாக, கடலில் படகுகளின் சேவை இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கடலோர பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, 1997ம் ஆண்டு பிரிட்டன் மகாராணி எலிசெபத், மாமல்லபுரம் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது செய்யப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பை போலவே, தற்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment