Modi's Video Interaction : 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து , பாஜகவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் மோடி. காணொளி காட்சிகள் மூலம், 5 பாராளுமன்ற வாக்குச்சாவடி பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் நரேந்திர மோடி. இன்று மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, திருச்சி, திருவள்ளூர், மற்றும் மதுரை ஆகிய இடங்களில் இந்த காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Modi's Video Interaction - எனது வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி
எனது வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி என்ற பெயரில் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சி. தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை அமைந்தகரை அய்யாவு மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் கட்சியைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய துணைத் தலைவர் முருகன், மாவட்டத்தலைவர், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் லோகநாதன், கிழக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், கோட்டப் பொறுப்பாளர் பாஸ்கர், நாடாளுமன்ற பொறுப்பாளர் கரு. நாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி “ மெகா கூட்டணியானது தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவே தவிர மக்களின் நலனிற்காக இல்லை” என்று கூறினார். மேலும் மக்களின் நலனிற்காக பாஜக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நகரமயமாக்கலை வாய்ப்பாக எண்ணிக் கொண்டு உழைத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 நகரங்களில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நகரங்களும் இடம் பெறும் என்று மோடி கூறினார்.
மதுரைக்கு மீனாட்சி தான் அடையாளம். ஆனால் வருங்காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலைப் போலவே எய்ம்ஸ் மருத்துவமனையும், மதுரையின் அடையளமாக மாறும் என்று கூறினார்.
மேலும் படிக்க : தேர்தலில் ஜெயிக்க என்ன வழி... தமிழக பாஜகவினருக்கு மோடி கொடுத்த அறிவுரை