tirunelveli | kanyakumari | rain | திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கு இரா. செல்வராஜ் அரசு செயலாளரும், (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை), தூத்துக்குடி மாவட்டத்துக்கு பா.ஜோதி நிர்மலா அரசு செயலாளரும் (வணிகவரித் துறை), தென்காசிக்கு சுன்சோங்கம் ஜதக் சிரு அரசு செயலாளரும் (சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை) நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவி எண்கள்:
மேலும் மாவட்டங்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070
வாட்ஸ் அப் எண். - 94458 69848
மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077 ஆகும்.
மாவட்ட ஆட்சியர் பேட்டி
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், “நெல்லை மாவட்டத்தில் வரலாறு கானத அளவில் 25 செமி மழை அளவு மாவட்ட முழுதும் பதிவாகி உள்ளது. செவ்வாய் கிழமை வரை மழை இருக்க கூடும்.
மாவட்டம் முழுதும் 20 முகாம்களில் 985 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 245 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு படை மூன்று குழுவும், மாநில பேரிடர் பாதுகாப்பு படை மூன்று குழுவும் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“