திருவண்ணாமலை, ஆரணி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களின் கேபிள்களில் தொங்கும் குரங்குகளைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சிவந்திபுரம் பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் என்ற மூதாட்டி உட்பட 3 பேர் குரங்குகளால் தாக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 5 பேர் குரங்கு கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வனத்துறையினர் அந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். சமீபத்தில் சிவந்திபுரம் வேதாளம் அருகே முத்துராமன் என்ற 8ம் வகுப்பு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வெள்ளை நிற குரங்கு ஒன்று சிறுவனை தாக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குனர் இளையராஜா ஊடகங்களிடம் கூறுகையில், சிவந்திபுரம் பகுதியில் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 2 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் மின் கேபிள்களை சேதப்படுத்தாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.
அதாவது, திருவண்ணாமலை, ஆரணி ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையங்கள், மாநில மார்க்கெட் கமிட்டி வளாகம், சண்முகா தொழில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இந்த மையங்களில் குரங்குகளை பிடிக்கும் பணி வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதி வரை தொடரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மையங்களில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் உட்பட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுவான கட்டுப்பாட்டு அறையுடன் அமைக்கப்பட்டுள்ளன. “சிசிடிவி கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்களில் குரங்குகள் தொங்கிக்கொண்டிருப்பதை பாதுகாப்புப் பணியாளர்கள் கவனித்துள்ளனர். எனவே, கண்காணிப்பு அமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், குரங்குகளை பிடிக்கும் பணியை மையங்களில் மேற்கொண்டுள்ளோம்” என, வன அலுவலர் ஜி.பி.சரவணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“