கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திரா,தெலுங்கானா,உ.பி.மகாராஷ்டிரா, தமிழ்நாடு,கேரளா என நாட்டின் பல்வேறு பகுதகளில் இருந்து 1000″த்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு,மான் கொம்பு,வேல் கம்பு, இரட்டைக் கம்பு,சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜூனியர்,சப் ஜூனியர்,சீனியர்,சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 5 வயது முதல் ஐம்பது வரையிலான போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“