கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பாலகிருஷ்ணன் தொலைந்துபோய் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்த ஒரு வருட காலமாக கோவை மாநகர காவல்துறை சார்பாக 3 முறை தொலைந்து போன செல்போன்கள் மற்றும் பறித்துச் சென்ற செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
1000-க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருட்டுப் போன செல்போன்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து 250 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. தொலைந்து போன செல்போன்கள் தொழில்நுட்பம் மூலமாக எங்கு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது. கேரளா, பெங்களுரூ மாநிலங்களிலிருந்தும் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் வழிப்பறி நடப்பதாக புகார் வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“