சென்னை ஆர்.கே.நகரில் 5 ஆயிரத்து 117 போலி வாக்களர்களை நீக்ககோரி திமுக சார்பில் தொடர்பாக வழக்கில் திங்களன்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தத் தடை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னும் ஆர்.கே. நகர் தொகுதியில் 5 ஆயிரத்து 117 மேற்ப்பட்ட போலி வாக்காளர்களை நீக்காமல் உள்ளது. அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என மீண்டும் விசாரிக்ககோரி திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ரவிசந்திரா பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் ஆணையம் நீக்கியதாக கூறி 45 ஆயிரம் பேரில் இந்த 5 ஆயிரத்தி 117 போலி வாக்காளர்கள் பெயர்கள் இருந்ததாகவும், அவர்களை நீக்காமல் நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்து ஆளும் கட்சி ஆதராக தேர்தல் ஆணையம் செயல்படுதாக குற்றச்சாட்டினார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 5 ஆயிரத்து 117 பேரில் 2 ஆயிரத்திறகும் மேற்ப்பட்டவர்களை நீக்கிவிட்டதாகவும், மற்றவர்களை இரட்டைப் பதிவு, இடம் பெயர்ந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டதாகவும், அது தொடர்பான அறிக்கை அனைத்து வேட்பாளர்களுக்கும் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 11ம் (வரும் திங்கள் கிழமை) தேதிக்கு தள்ளிவைத்தார்.