/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-12-at-14.46.03.jpeg)
12 மணி நேரத்தில் 6 பேர் கைது
கோவையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொடுக்கும்படி கூறி ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த சம்பவத்தில் ஆறு பேரை 12"மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சின்னகுட்டி என்பவர் பிரகாஷை தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்தவர்களிடம் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும் அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15% கமிஷன் கொடுப்பதாக கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-12-at-14.46.04-1.jpeg)
இதனை தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி மதியம் பிரகாஷை பணத்துடன் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதிக்கு பணத்துடன் சின்னகுட்டி வரவழைத்துள்ளார். அப்போது பிரகாஷின் கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற போது, பிரகாஷ் சத்தம் போடவே, அவரை மிரட்டிவிட்டு பணத்துடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதில் தேனி,திண்டுக்கல் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சின்னகுட்டி(42), மீனாட்சி(38), பாண்டியன் (52), அழகர்சாமி (45), சௌமியான்(29), கவாஸ்கர்(26) ஆகிய 6பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-12-at-14.46.04.jpeg)
மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 1கோடியே 27லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம்,3 நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை 12 நேரத்திற்குள் கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டி பண வெகுமதி வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.