சென்னை-பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை-கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றமானது, மே 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதாவது, பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் 2 முன்பதிவு பெட்டிகளும், கோவை எக்ஸ்பிரஸில் 1 முன்பதிவு பெட்டியும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்படவுள்ளது. இந்த முடிவு, அவசரமாக வெளியூர் பயணிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.
இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மாற்றப்பட்ட பிறகு, எத்தனை பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை என்கிற விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 15 முன்பதிவு பெட்டிகள்,1 ஏசி பெட்டிகள், 13 2-ம் வகுப்பு பெட்டிகள், 5 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இறுதியாக 1 2-ம் வகுப்பு லக்கேஜ் பெட்டி. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil