தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் பல்கலைக்கழகத்தில் 33-வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பொறியியல் தொழில்நுட்பம் மருத்துவம் பல் மருத்துவம் செவிலியர் துறை உணவு சமையல் கலை மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட கல்வித்துறையை சேர்ந்த சுமார் 4000 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், நடிகர் அர்ஜுன் மற்றும் இயக்குனர் பி. வாசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நடிகர் அர்ஜுன் மற்றும் இயக்குனர் பி. வாசு இருவருக்கும் ஏ.சி.எஸ் பல்கலைக்கழகம் சார்பில், அதன் வேந்தர் ஏ.சி. சண்முகம் டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பி.; வாசு, "ott தளங்கள் வந்த பிறகு அனைத்து சினிமாக்களும் வீட்டுக்கே வந்து விடுகின்றன. இதனால். சினிமா துறையே தத்தளித்து கொண்டிருக்கிறது" என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், "கிண்டியில் மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற சூழலில் டாக்டர்கள் இருக்கின்றனர். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் பார்த்தோம். அதிலிருந்துகூட நாம் பாடம் கற்கவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் பனி பாதுகாப்பு இன்று இருக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பினை அழிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பி. வாசு, "எனக்கும் எனது நண்பரும் சிறந்த நடிகருமான அர்ஜுனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் முகத்தை எனது தந்தை 300 தடவையாவது தொட்டிருப்பார். எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளராக எனது தந்தை இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட எம்ஜிஆர் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் இந்த டாக்டர் பட்டத்தை நான் பெறுவதற்கு அதன் வேந்தர் ஆன ஏசி சண்முகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் அர்ஜுன், "டாக்டர் பட்டம் பெருமளவிற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு பொறுப்பு மட்டும் கூடியுள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியதற்காக ஏசி சண்முகம் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“