Advertisment

ஒரே வார்டில் தாயும் மகளும் போட்டி; வந்தவாசியில் எகிறிய தேர்தல் விறுவிறுப்பு

வந்தவாசி நகராட்சியில் ஒரே வார்டில் தாயும் மகளும் எதிர்த்து போட்டியிடுவதால் வந்தவாசியில் தேர்தல் விறுவிறுப்பு எகிறி உள்ளது.

author-image
WebDesk
New Update
Mother and Daughter contesting at same ward in Vandavasi, local body polls, Vandavasi Munisipolity, ஒரே வார்டில் தாயும் மகளும் போட்டி, வந்தவாசியில் எகிறிய தேர்தல் விறுவிறுப்பு, Vandavasi, AIADMK, DMK

வந்தவாசி நகராட்சியில் தாயும் மகளும் ஒரே வார்டில் எதிரெதிராக போட்டியிடுவதால் அந்த வார்டில் தேர்தல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சியில் ஒரே வார்டில் தாயும் மகளும் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால், வந்தவாசியில் தேர்தல் விறுவிறுப்பு எகிறி உள்ளது.

வந்தவாசியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வந்தவாசியில் 18வது வார்டில்தான், தாயும் மகளும் எதிர்த்து போட்டியிடுகின்றனர். தாயுக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக, ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதாக கூறுகின்றனர்.

வந்தவாசி நகராட்சி 18வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, அப்பகுதியைச் சேர்ண்டஹ் இல்லத்தரசி என். கோட்டீஸ்வரி (58) வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போல, அவருடைய மகள் என் பிரியா (32) அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இப்படி தாயும் மகளும் எதிர்த்து போட்டியிடுவது கவனத்தைப் பெற்றுள்ளது.

இது குறித்து பிரியாவின் கணவர் டி ஆறுமுகம் ஊடகங்களிடம் கூறுகையில், 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நான் இதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டதாகவும் ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் கூறினார். தபால் ஓட்டு எண்ணிக்கையில் தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகளால் நான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறினார். தற்போது, ​​இந்து முன்னணியின் திருவண்ணாமலை மாவட்ட (வடக்கு) பிரிவு பொதுச்செயலாளராக இருக்கும் ஆறுமுகம் இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இந்த முறை போட்டியிட முடியவில்லை. அதனால், அவர் தனது மனைவியை களமிறக்க முடிவு செய்தார். ஆனால், அவருடைய மாமியார் திமுகவின் ஆதரவுடன் போராட்டத்தில் குதிப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

இந்த முறை நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புவதாகக் கூறும் ஆறுமுகம் சின்ன விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரியாவை எதிர்த்து அவருடைய அம்மா போட்டியிட முடிவு செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்ய திமுக ஆதரவு தெரிவித்தது என்று ஆறுமுகம் குற்றம் சாட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Local Body Polls
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment