Advertisment

பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தாய்மார்கள்!

குழந்தைக்கு பசிக்கும்போது, பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தைரியமாக தாய்பால் கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி கோவையில், தாய்மார்கள் பொது இடத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

author-image
WebDesk
Aug 07, 2022 18:43 IST
breastfeeding awareness, mothers breastfeeding awareness week, coimbatore, தாய்ப்பால் விழிப்புணர்வு, கோவை

குழந்தைக்கு பசிக்கும்போது, பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தைரியமாக தாய்பால் கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி கோவையில், தாய்மார்கள் பொது இடத்தில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

குழந்தைக்கு பசிக்கும் போது, பொது இடங்களில் தாய்மார் தைரியமாக தாய்பால் கொடுக்க முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் குழந்தைகளுக்கு அவசியம் தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தாய்மார்கள் வெளியில் செல்லும்போதும் - பொது இடங்களில் இருக்கும்போதும் எந்த வித கூச்சமுமின்றி குழந்தைக்கு பால் கொடு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பேரண்டிங் நெட்வொர்க் மற்றும் தாய்மார்கள் பொது இடத்தில் ஒன்றிணைந்து குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் நிகழ்வினை கோவை பந்தையசாலை பகுதியில் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பொது இடங்களில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க மறைவான பகுதிக்கோ அல்லது கழிவரை போன்ற பகுதிக்கோ செல்ல வேண்டியது இல்லை.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கண்டிப்பாக சுகாதாரம் என்பதை தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் எனவே பொது இடங்களில் தைரியமாக தாய்பால் கொடுக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்துகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coimbatore #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment