கோயம்புத்தூர் விழாவையொட்டி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இருசக்கர பேரணி நடைபெற்றது.
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியை கோயம்புத்தூர் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கிய பேரணி அவிநாசி சாலை வழியாக சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று கொடிசியாவில் நிறைவடைந்தது.
சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“