/tamil-ie/media/media_files/uploads/2019/10/cats-4.jpg)
Motor vehicles act 2019 Puducherry Chief Minister Tells Kiran Bedi
Motor vehicles act 2019 Puducherry Chief Minister Tells Kiran Bedi "practice before preach" : புதுச்சேரி முதல்வர் நாராணசாமிக்கும் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இருவருக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவது வழக்கம். சில காலம் கழித்து மீண்டும் சாலை விதிமுறை மீறல்கள் குறித்து இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். புதுவை மாநிலம் காமராஜர் நகரில் இன்று தேர்தல் நடைபெற இருந்ததையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தன்னுடைய தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று இந்து நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சாலை விதிகளை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் செல்லும் நாராயணசாமி மற்றும் அவருடைய தொண்டர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Practice before you preach... https://t.co/2Lz0Yrk4Ztpic.twitter.com/G6dhk08y0j
— V.Narayanasamy (@VNarayanasami) October 20, 2019
ஆகஸ்ட் 19ம் தேதி, 2017ம் ஆண்டு கிரண்பேடி ரோந்து சென்று இரவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிய முயற்சி செய்தார். அதனை அவர் ட்வீடிலும் பதிவிட்டிருந்தார். அப்போது அவர் பில்லியனில் அமர்ந்திருந்தாலும் தலைக்கவசம் அணியவில்ல்லை. அந்த புகைப்படத்தை ஷேர் செய்து “தன்னை சரி செய்து கொண்டு அடுத்தவர்களுக்கு பாடம் எடுக்க வாருங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறார் நாராயணசாமி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.