சென்னை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்படுவதை எதிர்த்து இன்று (ஜன.3 2024) வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சமீபத்தில் திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பதற்றம் நிலவியது. இந்தப் போராட்டத்தால் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டன.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் கடுமையான நெரிசலைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்தனை ஆண்டுகளாக பேருந்து நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலை அதிக பயன்பாட்டில் இல்லாததால், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகன ஓட்டிகள், ஜிஎஸ்டி சாலையைக் கடந்து, வண்டலூர் சிக்னலில் யு-டர்ன் எடுக்காமல் தவறான திசையில் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“