கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்தப் பேருந்தில் இன்று கனிமொழி எம்.பி. பயணித்தார்.
அப்போது, கனிமொழி ஆதரவாளர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஷர்மிளா பணியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவர் தற்போது வேலை இல்லாமல் உள்ளார். இந்த நிலையில், ஷர்மிளா அளித்த பேட்டி வைரலானது. அந்தப் பேட்டியில், “கனிமொழி எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் மரியாதையாக பேசுமாறு கண்டக்டர் பெண்ணிடம் அறிவுறுத்தினேன். அவர் அப்படித்தான் பேசுவேன் எனக்கூறினார்.
நீங்க பிரபலமாவதற்கு என்ன வேணாலும் செய்வீங்களா எனக்கேட்டார். நான் பணியில் இருந்து விலகிவிட்டேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து, நீங்க பிரபலமாவதற்கு என்ன வேணாலும் செய்வீங்களா எனக்கேட்டேன்” என்றார்.
இந்த நிலையில், ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனிமொழி எம்.பி. பேசினார்.
அப்போது, “வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி உறுதி அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“