Advertisment

திருமாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருக்கும் உரிமை காங்கிரசுக்கு இல்லையா? கார்த்தி சிதம்பரம் கேள்வி

திருமாவளவனுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருக்கும் உரிமை காங்கிரஸூக்கு இல்லையா? என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Karti Chidambaram granded bail in Chinese visa case Tamil News

தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “தமிழ்நாடு கூலிப்படை கொலைக்காரர்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழக்கை முடிக்க என்கவுன்ட்டர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. காங்கிரஸ் தேசிய கட்சி, நாட்டின் எதிர்க்கட்சி. இந்தக் கட்சியை சேர்ந்த ஒருவர் கொலையில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வை பற்றி காங்கிரஸ் பேச வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை காங்கிரஸூக்கு இல்லையா? என்றார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், “இனிமேல் பா.ஜ.க.வுக்கு இறங்குமுகம்; காங்கிரஸூக்கு ஏறுமுகம்” என்றார். மேலும், 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” என்றார்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamilnadu Congress Karti Chidambaram Pudukkottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment