தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் அபேஸ்: டெல்லி தி.மு.க விழாவில் கைவரிசை

டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு; போலீஸ் விசாரணை

டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு; போலீஸ் விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் அபேஸ்: டெல்லி தி.மு.க விழாவில் கைவரிசை

 MP Thamizhachi Thangapandian’s Mobile phone theft in Delhi DMK office function: டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின், இன்று திறந்து வைத்தார். 

தொடர்ந்து, திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றினர். அதன்பின், அண்ணா மற்றும் கருணாநிதியின் மார்பளவு சிலைகளும் திறந்து வைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்: டெல்லி தி.மு.க அலுவலக திறப்பு விழாவில் சோனியா: உதயநிதி என்ட்ரிக்கு மாஸ் ரெஸ்பான்ஸ்!

Advertisment
Advertisements

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன், திருநாவுக்கரசர், கபில் சிபில், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் கலந்துக் கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் திருடப்பட்டுள்ளது. திமுக அலுவலக திறப்பு விழாவில் எம்.பி.,யின் செல்போன் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: