தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை வேகமாக பரவிய நிலையில், சுவீடன் நாட்டிலும் குரங்கம்மை உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம், அவசர நிலையை அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கும் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“