சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நடந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது, ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை எந்தெந்த பெண்களுக்கு எல்லாம் கட்டாயம் வழங்கப்படும் எனக் கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி அறிவித்துள்ளார்கள். ஆனால் 2.10 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.
இந்தப் பணம் எப்படி போதும் எனக் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் நிதி அமைச்சர் ஏற்கனவே பதில் அளித்துவிட்டார். உரியவர்களுக்கு கொடுக்கப்படும் என அவர் அப்போதே தெளிவாக கூறிவிட்டார்.
அந்த உரியவர்கள் யாரென்றால் இந்த அரங்கில் உள்ள 100 சதவீதம் பேரும் உரியவர்கள். அதாவது குடிமை மாற்று வாரியத்தில் உள்ள 100 சதவீதம் பேரும் உரியவர்கள் ஆவார்கள்.
ஆக எங்க கொடுக்க வேண்டுமே அங்கே கொடுப்போம். அதைத் தான் உரியவர்கள் என்றார்கள்” என்றார். இதையடுத்து பங்களாவில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு கொடுக்க முடியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/