நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. சில அரசியல் கட்சிகளும் இதனைக் கூறிவந்தன.
இதையும் படியுங்கள்: மீண்டும் கட்டாய முகக்கவசம்; மருத்துவர்கள் அறிவுரை
இதற்கிடையில், நிலம் கையப்படுத்தும் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்கை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரம், நிலம் கையப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 1 கோடி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தின.
இந்தநிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், என்.எல்.சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல. ஏற்கனவே நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3,000 பேருக்கு என்.எல்.சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது என்றும் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil